சுடச் சுடச் செய்திகள்

ரஷ்யாவில் மோடி: கூடங்குளம் அணு உலை குறித்து ஆலோசனை

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயண மாக ரஷ்யா சென்றடைந்தார். கூடங்குளத்தில் அமையவுள்ள 5, 6வது அணு உலைகள் குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ஆலோசனை நடத்தி னார். இருநாட்டு உறவை வலுப் படுத்தும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கலாசாரப் பரிமாற்றங்கள், ரயில்வே உள் ளிட்ட பன்னிரண்டு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள னர். “வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரைச் சென்றடைந்துள்ளேன். இந்தியா- ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கம்,” என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆறுநாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெ யின் ஆகிய நான்கு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற் கொண்டுள்ளார்.