ரூ.400 கோடி முறைகேடு புகார்: பாபா சித்திக் வீட்டில் சோதனை

மும்பை: ரூ.400 கோடி முறைகேடு புகார் தொடர்பாக நேற்று மும்பையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அத்துடன் அவருடன் தொடர்புடைய கட்டுமான அதிபர், அவரது சொத்துச் சந்தை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் 7 இடங்களில் அமலாக்கப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.