சுடச் சுடச் செய்திகள்

பெண் பொறியாளர் சுட்டுக் கொலை

நொய்டா: நொய்டா அருகே பெண் பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்குள்ள கண் காணிப்பு புகைப்படக் கருவியில் பெண் சுடப்பட்ட சம்பவம் பதி வானதை வைத்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி ரத்தோர், 23. பொறியியல் துறையில் படிப்பை முடித்திருந்த அவர் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ஒரு கைபேசி தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நொய்டா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தன் தோழிகளுடன் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அஞ்சலி வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரின் நெற்றியில் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேசமயம் அஞ்சலியுடன் தங்கி யிருந்த ஒரு தோழி வீட்டில் இருந்து வெளியே வந்தவர், ரத்த வெள்ளத் தில் அஞ்சலி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சக தோழிகள் உதவி யுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அஞ்சலி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். “எங்கள் மகளை உடன் படித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபர்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்,” என சந்தேகம் தெரிவித் துள்ளனர் அஞ்சலியின் பெற்றோர்.

மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட அஞ்சலி.