சுடச் சுடச் செய்திகள்

மராவி விமானத் தாக்குதலில் 11 பிலிப்பீன்ஸ் வீரர்கள் பலி

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகரில் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் எதிர்பாராத விதமாக பிலிப்பீன்ஸ் வீரர்கள் 11 பேர் பலியானதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்நகருக்குள் ஊடுருவியுள்ள போராளிகள் மீது நேற்று முன்தினம் ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ராணுவ வீரர்கள் சிலர் பலியான தாக தற்காப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரன்சானா மணிலாவில் செய்தியாளர்களிடம் கூறினார். சண்டை நடக்கும்போது சில சமயங்கள் இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் சரிவர கையாளப் படாததால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன என்றும் தற்காப்பு அமைச்சர் கூறினார்.

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மராவி நகருக்குள் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை ஊடுருவிய துப்பாக்கிக்காரர்களை வெளியேற்ற ராணுவத்தினர் கடுமையாகச் சண்டையிட்டு வரு கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் போராளிகள் மீது ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கி வருவதுடன் ஹெலி காப்டர்கள் உதவியுடன் ராக் கெட்டுகளையும் வீசித் தாக்கி வருகிறது. அந்நகரின் பெரும் பகுதியை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் சில பகுதிகள் போராளி கள் வசம் உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon