சுடச் சுடச் செய்திகள்

பருவநிலை உடன்பாடு: டிரம்ப் இன்று அறிவிப்பு

வா‌ஷிங்டன்: பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுகிறதா, இல்லையா என்பதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சிங்கப்பூர் நேரப்பட்டி இன்று அதிகாலை 3 மணியளவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. அந்த உடன் பாட்டைக் கைவிட திரு டிரம்ப் முடிவு செய் திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளி வந்தன. இந்நிலையில் அந்த உடன்பாடு குறித்த தமது முடிவை இன்று காலை அறிவிக்க விருப்பதாக திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பருவநிலை உடன்பாட்டை குறை கூறிவரும் திரு டிரம்ப் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் அவரது முடிவை எதிர்பார்த்து உலக நாடுகள் காத் திருக்கின்றன. இந்த உடன்பாடு மிகவும் முக்கிய மானது என்று சீனாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தெரிவித்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் காணப் பட்ட அந்த உடன் பாட்டுக்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித் திருந்தார். ஆனால் அதிபர் டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே பாரிஸ் உடன்பாட்டை குறை கூறி வந்தார். அந்த உடன் பாட்டுக்கு அமெரிக்க தொழில் அதிபர்கள் எதிர்ப்புத் தெரிவித் திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண் டாமா? என்ற குழப்ப நிலையி லேயே டிரம்ப் இருந்துவந்தார். இந்நிலையில், பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப் பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறி விப்பு வெளிவராத நிலையில் விரைவில் அதுபற்றி அறிவிக்க விருப்பதாக திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.