சுடச் சுடச் செய்திகள்

‘எதற்கும் அஞ்சப் போவதில்லை’

இப்போதெல்லாம் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கே காரசாரமாக ஏதாவது விவாதிப்பதும் பேசுவதும் விஷாலுக்கு வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான பிறகு கோபத் துக்கு மத்தியில் பொறுப்பாகவும் அக்கறையுடனும் அவர் பேசுவதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிப் பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஆவேசமாகக் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட விவகா ரத்தை மையப்படுத்தி புதிய படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளி யிடும் நிகழ்வுதான் அது. இதில் விஷால் பேசும்போது, இன்றைக்கு சினிமாவை ஆபத்து பல வழிகளில் சூழ்ந்துள்ளது என்று கவலை தெரிவித்தார். அத்தகைய சூழல் வளரக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தப் போராட்டம் அறி விக்கப்பட்டதாகவும் கூறினார்.

‘துப்பறிவாளன்’ படத்தின் ஒரு காட்சியில் விஷால்.