சேதுபதி போனார்; அமீர் வந்தார்

இப்போதெல்லாம் யார், யார் எந்தப் படத்தில் எத்ததகைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதை அவ்வளவு சுலபத்தில் முடிவு செய்துவிடுவதற்கில்லை. ஏனெனில் தினந்தோறும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகரும் இயக்குநருமான அமீர் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

தொடக்கத்தில் அது மிக அழுத்தமான வேடம் என்பதால் விஜய் சேதுபதி நடிப்பார் என வெற்றி மாறன் தரப்பில் கூறப்பட சேதுபதியும் ஆமோதித்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இப்போது சேதுபதி போய், அமீர் வந்திருக்கிறார். மற்றவர்களைவிட அமீரால் இக்கதாபாத்திரத்தை சிறப் பாக கையாள இயலும் என நம்புவதே இம்மாற்றத்துக்கான காரணமாம்.