சுடச் சுடச் செய்திகள்

கும்ளே, கோஹ்லி விரிசலைத் தணிக்க நிர்வாகிகள் முயற்சி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கும்ளேவின் பதவிக் காலம் வெற்றியாளர் கிண்ணப் போட்டி யுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பயிற்றுவிப்பாளர் கும்ளே, அணித் தலைவர் விராத் கோஹ்லி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாகவே புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதாகச் செய்திகள் வெளியாயின. கும்ளே ஒரு தலைமை ஆசிரியர் போல் வீரர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வ தாகவும் அணிக்கான 11 வீரர்கள் தேர்வு விஷயத்தில் கோஹ்லிக்கும் அவருக்கும் மோதல் போக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெற்றியாளர் கிண்ணப் போட்டி இன்று தொடங்கும் நிலையில் கும்ளே, விராத் கோஹ்லி இடையிலான விரிசல் அணியின் செயல்பாட்டைப் பாதிக் கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அஞ்சுகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் செயத்ரி, பொது மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் இங்கிலாந்து சென்று கும்ளே மற்றும் விராத் கோஹ்லியைத் தனித்தனியாக சந்தித்துப் பேசி சமரச முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தகவல்கள் வெளி யாகி இருக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon