கேரத் பேல்: தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பில்லை

கார்டிவ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடவேண்டும் என்ற தீராத ஆசையால், ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் வலியைப் போக்க மாத்திரைகளை உட் கொண்டு பயிற்சியை மேற் கொண்டபோதிலும் நாளை வேல் ஸின் கார்டிவ் நகரில் நடை பெற உள்ள இத்தாலியின் யுவெண்டஸ் குழுவுடனான இறுதிப் போட்டியில் தொடக்க வீரராக தாம் களமிறங்க வாய்ப்பில்லை என்பதை ரியால் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கேரத் பேல் ஒப்புக் கொண்டுள்ளார். வேல்ஸின் கார்டிவ்வில் பிறந்த பேல் பிறந்த மண்ணில் விளையா டும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேளை யில் கடந்த நவம்பர் மாதம் போர்ச் சுகலின் ஸ்போர்டிங் லிஸ்பனுட னான ஆட்டத்தில் விளையாடிய போது கணுக்கால் தசைநார்களில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுவதுமாக மீண்டு வராத நிலையில் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதி ஆட்டம் நடை பெறவுள்ளது. காயம் ஏற்பட்டு 88 நாட்களே ஆன நிலையில் ஸ்பெயினின் எஸ்பான்யோல் குழுவுடனான ஆட்டத்தில் விளையாடியபோது அவரால் முழுவீச்சில் விளையாட முடியாமல் இருந்தது.

பார்சிலோனாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்து ஆட்டத்தைவிட்டு வெளியேறிய கேரத் பேல். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி