ஐநாவிடம் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம்

நியூயார்க்: வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க வகை செய்யும் நகல் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம் குறித்து பாதுகாப்பு மன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நகல் தீர்மானத்திற்கு சீனாவும் இணக்கம் தெரிவித்திருப்பதால் இத்தீர்மானம் பெரும்பாலும் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

வடகொரியாவுக்கு எதிராக ஏற்கெனவே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இரண்டு தடவை அணுவாயுத சோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டுள்ளது.