பேருந்தில் தீ மூட்டிய ஓட்டுநர்; 11 சிறுவர்கள் பலி

பெய்ஜிங்: சீனாவில் சென்ற மாதம் ஒரு பேருந்தில் மூண்ட தீயில் 11 சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் வேண்டுமென்றே தீ மூட்டியதால்தான் அந்த விபத்து நிகழ்ந்ததாக சீன ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. மூன்று வயதுக்கும் 7 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள், பாலர் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த வழியில் அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. தென் கொரியாவைச் சேர்ந்த 5 சிறுவர்களும் சீனாவைச் சேர்ந்த 6 சிறுவர்களும் விபத்தில் உயிரிழந்தனர். ஓட்டுநரும் விபத்தில் உயிரிழந்தார். அந்த ஓட்டுநர், அவர் கூடுதல் நேரம் வேலை செய்ததற்கான சம்பளம் மற்றும் இரவு ‌ஷிப்ட் சம்பளம் குறைக்கப் பட்டதால் சினம் அடைந் திருந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே தீப்பற்ற வைக்கும் கருவி காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.

Loading...
Load next