விவசாயியிடம் லஞ்சம்; அதிகாரிக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை

கடலூர்: கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை, 40, என்ற விவசாயி. சொத்துப் பிரச்சினை தொடர்பாக திட்டக்குடி தாலுகா அலுவலகத்தை 2008ல் அவர் அணுகினார். அப்போது பதிவறை எழுத்தராக இருந்த மஞ்சமுத்து என்பவர் ரூ.1,500 லஞ்சம் கேட்டார். உடனே அது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்துவிட்டு, செந்தாமரை ரூ.1,500 லஞ்ச பணத்தை மஞ்சமுத்துவிடம் கொடுத்தார். அவர் அந்தப் பணத்தை தனது உதவியாளர் கொளஞ்சிநாதனிடம் கொடுத்தார்.

அதை பதுங்கி இருந்த அதிகாரிகள் பார்த்தனர். வழக்கில் மஞ்சுமுத்துக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உதவியாளர் கொளஞ்சிநாதன் இறந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.