சென்னை சில்க்ஸ் இடிப்பு; புதிய கட்டடம் கட்ட திட்டம்

சென்னை: சென்னை தியாக ராயநகர் வடக்கு உஸ்மான் சாலை யில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணிகள் நேற்றுத் தொடங்கின. இரண்டு ராட்சத ‘ஜா கட்டர்’ வாகனங்களைக் கொண்டு பணி கள் நடக்கின்றன. சென்னையின் வர்த்தக மைய மான தியாகராய நகரில் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடையில் ஏற் பட்ட தீ விபத்தில் ஏழு மாடிக் கட்டடமும் அதில் இருந்த கோடிக் கணக்கான மதிப்புள்ள ஜவுளி களும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தின. அங்கு வியாழக்கிழமையும் தீ சில இடங்களில் எரிந்துகொண்டு இருந்தது. அந்த தீ அணைக்கப் பட்டு நேற்று கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. கட்டடம் மேலிருந்து கீழ் நோக்கி இடிக்கப்பட்டுள்ளது. கட் டடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத் துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவக் குழு வருகை தந்து உள்ளது. இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருந்தார். என்றாலும் பணிகள் நேற்றுக் காலை 11 மணியளவில்தான் தொடங்கின. சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் புதன்கிழமை அதி காலையில் திடீரென்று பயங்கர தீ மூண்டது. 12 நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங் கள், 250க்கும் அதிக ஊழியர்கள் ரசாயனக் கலவையையும் தண்ணீ ரையும் கொண்டு தீயை அணைத் தும் முடியவில்லை. இரவு முழுவதும் கட்டடத்தைக் குளிர்விக்கும் வகையில், கட்டடம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த நிலையில், கட்டடம் திடீரென்று இடியத் தொடங்கியது, கண்ணாடிகளும் பெயர்ந்து விழுந்தன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்