சுடச் சுடச் செய்திகள்

ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள் அவசியம்

ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலே சியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளும் 1971ல் அமைத்த ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள் அமைப்பு, இன்றைய சூழலில் நிலவும் பயங்கரவாதம் போன்ற பாதுகாப்பு மிரட்டல்களைச் சமாளிப்பதற்குத் தொடர்ந்து அவ சியமானதாக இருப்பதாக ஐந்து நாடுகளின் தலைவர்களும் நேற்று கூறினர். சிங்கப்பூரிலுள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் இக்கருத்தை வெளியிட்டனர். சந்திப்புக்குப் பிறகு செய்தி யாளர் கூட்டத்தில் பேசிய சிங்கப் பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், “வட்டாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவ்வமைப்பு முக் கிய அங்கம் வகிப்பதாக உறுதி செய்து”, இந்த அமைப்பில் “நிலை தடுமாறாத கடப்பாடு” கொண்டி ருப்பதாக அமைச்சர்கள் கூறியதா கத் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon