விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருவருக்கு காயம்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த தொடர் விபத்தில் குறைந்தது இரு கனரக லாரிகளும் ஒரு சாதாரண லாரியும் மோதிக்கொண்டன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் பகிர்ந்த காணொளியில், விரைவுச் சாலை நெடுகிலும் கனரக லாரிக ளும் போலிஸ், அவசர வாகனங்க ளும் நின்று கொண்டிருந்தன. துவாஸை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பெனோய் ரோடு வெளிச்சாலைக் குச் சற்று முன்பு விபத்து நேர்ந்து உள்ளது என்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் பைனியர் ரோடு வெளிச்சாலை வரைக்கும் நீண்டிருக்கிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையத் தின் டுவிட்டர் செய்தி நேற்று மாலை 4.17 மணிக்குக் கூறியது. விபத்து குறித்து தனக்கு மாலை 4.03 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை சொன்னது. விபத்தில் காயமடைந்த இருவர் இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.