இருக்கைவார் அணியாதவர்களுக்கு ஆபத்துகள் அதிகம்

காரின் பின் இருக்கையில் அமர்ந்துள்ள நீங்கள் இருக் கைவார் அணியவில்லை என்றால் விபத்து நிகழும்போது உங்களுக்கு ஆபத்துகள் நிகழும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பின் இருக்கையில் அமர்ந்திருப்போர் இருக்கைவார் அணியவில்லை என்றால் அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களைவிட, காரின் ஓட்டுநரைவிட மோச மான காயங்கள் ஏற்பட 45% வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் காலை 7 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பயணம் செய்யும் 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இருக்கைவார் அணியாத பயணிகளுக்கு மோசமான காயங் கள் ஏற்பட்டிருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடுமையான தலைக் காயங்கள், இடுப்பு எலும்பு முறிவு கள் போன்றவை மோசமான காயங்களில் அடங்கும். “வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெரும்பாலோர் இருக்கைவார் அணிவதில்லை என்று ஆய்வு கூறுகிறது. அவர்களே மோசமான காயங்களுக்கு ஆளா கின்றனர்,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமையேற்ற சிங்கப்பூர் பொது மருத்துவமனை பொது அறுவை சிகிச் சைப் பிரிவின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் வோங் டிங் ஹ்வே கூறினார். “இனிமேலும் பின் இருக்கை பயணிகள் இருக்கைவார் அணிவார்கள் என்று நம்புகிறோம்,” என்று டாக்டர் வோங் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வர்த்தகர் மாநாட்டில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுடன் கைகுலுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டத்தை சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. படம்: த நியூ பேப்பர்

21 Sep 2019

புகைமூட்டம்; காற்றாய் பறக்கும் சாதனங்கள்