ஆணிவேராக நின்ற ரூட்

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து, பங்ளாதேஷ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 128 ஓட்டங்களையும் விக்கெட் காப்பாளர் முஷ்ஃபிகுர் ரஹிம் 79 ஓட்டங்களையும் விளாசினர். அடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் ஒரே ஓட்டத்துடன் வெளியேறினார். ஆனாலும், அலெக்ஸ் ஹேல்ஸ் (95), ஜோ ரூட் (133*), ஆய்ன் மோர்கன் (75*) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 16 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அந்த அணி வென்றது. எனினும், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாகத் தொடரைவிட்டே விலகியது அந்த அணிக்குப் பின்னடைவுதான்.

Loading...
Load next