பயிற்றுவிப்பாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக் போட்டி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் குதித்துள்ளார். இப்போதைய பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் விராத் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலருக்கும் கும்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ‘சச்சின்-சௌரவ்- லட்சுமண்’ என்ற இந்திய கிரிக்கெட் கட் டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழு கும்ளேவையும் கோஹ் லியையும் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும், புதிய பயிற்றுவிப்பாளருக் கான விண்ணப்பங்களைப் பெற்று வந்தது. கடந்த மாத இறுதியுடன் விண்ணப்பிப்பதற் கான காலக்கெடு முடிந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியின் ஆண் களுக்கான இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி (இடது), சட்விக்சாய் ராஜ் ரன்கிரெட்டி தோல்வி அடைந்தனர். படம்: ஏஎஃப்பி

23 May 2019

சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

23 May 2019

கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்