வெற்றி நம்பிக்கையில் யுவென்டஸ்

கார்டிஃப்: ரியால் மட்ரிட் குழுவிற்கு எதிராக நாளை அதிகாலை 2.45 மணிக்கு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்து இறுதிப் போட்டிக்கு யுவென்டஸ் குழு சிறப்பாக ஆயத்தமாகி இருப்பதாக அதன் நிர்வாகி மஸிமிலி யானோ அலெக்ரி தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் பார்சிலோனாவிடம் வெற்றியை இழந்த யுவென்டஸ் இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாக அலெக்ரி கூறியுள்ளார்.

“ரியால் பலமிக்க குழு; ஆட்ட நுணுக்கம், வேகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக இருக்கும் குழு. ஏராளமான இறுதிப் போட்டிகளில் விளையாடி அவர்களுக்குப் பழக்கம் உள்ளதால் இந்த ஆட்டம் மிகச் சிறப் பானதாக இருக்கும்,” என்றார் அலெக்ரி. “பெர்லினில் 2015ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியை ஒப்புநோக்க, எமது குழு இம்முறை கிட்டத்தட்ட எல்லா நிலைகளிலுமே மாறி இருக் கிறது. அப்போது விளையாடியோரில் நான்கு, ஐந்து வீரர்களே இப்போது உள்ளனர். எமது தன்னம்பிக்கை, எமது திறமை மீதான விழிப்புணர்வு, சூழல் என எல்லாமே மேம்பட்டுள்ளது,” என்று அவர் சொன்னார்.

2001 முதல் யுவென்டஸ் குழு சார்பில் விளையாடி வந்தாலும் அதன் தலைவரும் கோல்காப்பாளருமான 39 வயது ஜியான்லுய்ஜி புஃபான் இன்னும் ஒருமுறைகூட சாம்பியன்ஸ் லீக்கை வென்றதில்லை. ஆகையால், சாம்பியன்ஸ் லீக்கை வெல்வது தன்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கருதுகிறார் இத்தாலிக்காக 168 அனைத்துலக ஆட்டங்களில் விளை யாடி இருக்கும் புஃபான். “இறுதிப் போட்டியில் வெல்லும் பட்சத்தில், உலகக் கிண்ணத்திற்குப் பிறகு, எனது காற்பந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்,” என்றார் புஃபான்.

அவருடன் ஜார்ஜியோ கியலினி, அலெக்ஸ் சாண்ட்ரோ, மாரியோ மண்ட்ஸுகிச், லியானர்டோ பொனுச்சி, டேனி ஆல்வெஸ் என முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பது யுவென்டசுக்குப் பெரும் பலம். இதற்கிடையே, கடந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் ரியால் கிண்ணத்தை வெல்ல முக்கியப் பங்காற் றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்துணர்ச்சியுடன் காணப்படுவதால் யுவென்டஸ் வெற்றிக்குக் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். “ஸ்பானிய லீக்கை வென்றதன் மூலம் சற்று நிம்மதி அடைந்துள்ளோம். அதேபோல, சாம்பியன்ஸ் லீக்கையும் வென்று, கிண்ணத்தைத் தக்கவைத்து சாதனை படைக்க விரும்புகிறோம்,” என்றார் 32 வயதான ரொனால்டோ.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி