மோடி அரசின் தவறான முடிவால் பொருளியல் வீழ்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்- பட்டது. அது கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் இந்தியா- வின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இது கடந்த 3 ஆண்டுகளில் மிக- வும் குறைவான வளர்ச்சி விகித- மாகும். “இந்தியாவின் பொருளியல் வீழ்ச்சிக்கு மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையே காரணம்,” என்று காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்- ளார். “ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதி- யாண்டின் கடைசி 3 மாதங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்- பத்தி 6.1 விழுக்காடாக வீழ்ச்சி- யடைந்தது. இதனால் ‘உலகில் மிக வேகமாக பொருளியல் வளர்ச்சியடைந்து வரும் நாடு’ என்ற தகுதியை இந்தியா இழந்- தது. வீழ்ச்சியடைந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம். இந்த அடிப்படைத் தோல்விகளி- லிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, மத்திய அரசு புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே வருகிறது என்றார் ராகுல்.

ப.சிதம்பரம் இதுகுறித்துத் தனது கட்டுரைப் பக்கத்தில், "ரூபாய் நோட்டு மீட்பு நட- வடிக்கையால் நாட்டின் பொருளி- யல் கடுமையான சரிவைச் சந்திக்கும் என்ற எனது கணிப்பு தற்போது உண்மையாகிவிட்டது," என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை தொடக்கம் முதலே நான் எதிர்த்து வந்தேன். அந்த நட- வடிக்கையால் வேலை வாய்ப்பு, உற்பத்தி ஆகியவை வீழ்ச்சியடை- யும் என்று அச்சம் தெரிவித்து வந்தேன். “எனது கணிப்பு தற்போது சரி- யாகிவிட்டது. கடந்த நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடா- கக் குறைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடத்தல் கும்பலிடமிருந்து 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்

18 Oct 2019

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காக இவ்விரு புலி சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாக வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். படம்: வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்ட காணொளியிலிருந்து

18 Oct 2019

புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்