ரகுல்: முத்தத்திற்கு தயார்

தன்னுடன் நடிக்கும் நாயகனுடன் முத்தக்காட்சியில் இணைந்து நடிக்கத் தான் தயார் என்று கவர்ச்சி நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’, கார்த்தியுடன் இணைந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களிலும் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். ‘சிம்லா மிர்சி’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். “படத்தில் என்னுடைய பாத்திரத்துக்கும் கதைக்கும் அதிக கவர்ச்சி தேவைப்படாதபொழுது நான் ஒரு போதும் கவர்ச்சியாக நடிப்பதில்லை. அதேபோலத்தான் முத்தக்காட்சியிலும் அவசியம் என்றபோது மட்டுமே நான் நடிக்கிறேன். பெரும்பாலும் நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் ரசிகர் களுக்குப் பிடிக்க வேண்டும் என்ற கோணத்தில்தான் நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

“எந்தப் பெரிய கதாநாயகனாக இருந்தாலும் சரி, எனக்கான கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே அந்தப் படத்தில் நான் நடிப்பேன்,” என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் ‘ராராண்டோய் வெடுக்கச் சூடம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுல். இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பிரம்மரம்பா. இதுநாள் வரை நான் நடித்த படங்களில் எனது பாத்திரங்களின் பெயர்கள் ஒன்றிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன எனக் கூறிய ரகுல், இந்தப்படத்தின் பாத்திரம் எனக்கு என்றென்றும் மறக்காமல் நினைவுடன் இருக்கும். வெறும் பெயருக்காக மட்டுமல்ல, இத்தனை நாட்களில் நான் நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு பாத்திரம் எனக்குக் கிடைக்கவே இல்லை. அப்படி ஒரு பாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் கல்யாண் கிருஷ்ணாவிடம் “உங்களது அடுத்த படத்திலும் நான்தான் நாயகியாக நடிப்பேன். வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என எச்சரித் துள்ளேன்” எனக் கூறியுள்ளார் ராகுல் பிரீத் சிங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!