சித்தார்த்: உணவில் தலையிடாதீர்கள்

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற் குத் தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் மக்களின் உண வைப் பறிக்காமல் அரசு மக்களுக்கு உணவளிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. நடிகர் சித்தார்த்தும் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப் பட்ட விருப்பங்களில் தலையிடாதீர் கள். நம்மில் பலர் ‘பக்தாஸ்’ அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்,” எனக் கூறியுள்ளார். இதேபோல் அரவிந்த்சாமியும் பதிவிட்டுள்ளார். “இந்தியாவில் அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகப் பசி குறியீட்டில் இந்தியா 67வது இடத் தில் உள்ளது. மக்களின் உணவைப் பறிக்க காரணம் தேடிக்கொண்டிருக் கிறது அரசு. அதே அக்கறையை மக்களுக்கு உணவளிப்பதில் காட்ட வேண்டும், அதைத்தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன,” எனக் கூறியுள்ளார்.

Loading...
Load next