சுடச் சுடச் செய்திகள்

சாவித்திரி போல் மாற பருமனாகும் கீர்த்தி

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்துக்காக அனுஷ் காவைப் போல் கீர்த்தி சுரே‌ஷின் உடல் எடையையும் அதிகரிக்க திரையுலகினர் முயன்று வருகின்றனர். நடிகையர் திலகமான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும் சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரே‌ஷின் உடல் எடையைக் கூட்டும்படி இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். ஆனால் அதில் பயனில்லை. தற்போது கீர்த்தி இரட்டை ஜடை போட்டு படப்பிடிப்பில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அப் படத்தில் சாவித்திரி சாயல் இருந்தாலும் அவரைப்போல் பருமனாக இல்லை என்கின்றனர். இதனால் ‘பாகுபலி 2’ படத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக மாற்றியதுபோல இப் போது ஒல்லியாக இருக்கும் கீர்த்தியை கிராபிக்சை பயன்படுத்தி பருமனாக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.