சுடச் சுடச் செய்திகள்

உயிர்க்கொல்லி குப்பை எறிந்த 71 வயது மூதாட்டி கைது

ஜாலான் புக்கிட் மேராவில் உயிர்க்கொல்லி குப்பை எரிந்த சம்பவம் தொடர்பில் 71 வயது மூதாட்டியை போலிஸ் கைது செய்துள்ளது. அந்த மூதாட்டி தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக தனது புளோக் 113இன், 10வது மாடி வீட்டிலிருந்து பொருட்களை எறிந்து கொண்டிருந்தார் என்று ஸ்டாம்ப் இணையத் தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்தத் தகவலை அளித்த பெயர் குறிப்பிட விரும்பாத குடி யிருப்பாளர் ஒருவர், அந்த மூதாட்டி நாள்தோறும் காலை வேளையில் தனது 10வது மாடி வீட்டிலிருந்து வேண்டாத பொருட் களை வீசி எறிவார் என்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

தனது வீட்டைத் தாண்டி மேலிருந்து பொருட்கள் வீசப்படு வதை தான் முதலில் கண்டதாக வும் அந்த மூதாட்டிக்கு மூன்று மகன்கள் உள்ளனர் என்றும் எனினும் அவர் தனியாக வாழ்ந்து வருகிறார் என்று அந்தக் குடியிருப்பாளர் கூறினார். கடந்த இரு வாரங்களாக, சிறிய மின்சார சாதனங்கள், வெட்டப்பட்ட துணிகள், பெட்டி கள், கண்ணாடிக் குவளைகள் அடங்கிய ஒரு பெட்டி ஆகிய வற்றை மூதாட்டி எறிந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தங் களுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது என்றும் கண்மூடித்தனமான செயலுக்காக மூதாட்டி கைது செய்யப்பட்டார் என்றும் போலிஸ் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon