சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் -ஆஸ்திரேலியா நட்பைப் பாராட்டிய பிரதமர் லீ

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் பரப்பளவிலும் கலாசாரத்திலும் மாறுபட்டிருந்தாலும் இரு நாடு களும் நிலையான நட்பை நிலை நாட்டியுள்ளன என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். சிங்கப்பூருக்கு முதல் முறை யாக அதிகாரத்துவ வருகை அளித்திருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுக்கு நேற்று முன் தினம் விருந்துபசரிப்பு வழங்கினார் திரு லீ. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர்-ஆஸ்தி ரேலியத் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ஆஸ் திரேலியாவின் கேன்பரா நகருக் குச் சென்றிருந்தபோது திரு டர்ன்புல் தமக்கு சிறந்த விருந்துபசரிப்பு வழங்கினார் என்றும் இப் போது அதற்குப் பதிலாக தம்மால் அவரை உபசரிக்க முடிந்ததை எண்ணி மிகவும் மகிழ்வதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு, திருமதி டர்ன்புல்லுடன் தாமும் தமது துணைவியாரும் எடுத்துக்கொண்ட ‘வீஃபீ’ படத் தையும் இக்கருத்துகளையும் திரு லீ பதிவிட்டிருந்தார். சிங்கப்பூரும் ஆஸ்திரேலியா வும் இணைய பாதுகாப்பு, அறி வியல் ஆராய்ச்சியில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு மேலும் சிறப்பான விசா திட்டங்களும் அறிமுகமாகியுள்ளன என்றும் குறிப்பிட்ட திரு லீ, இவை நமது இருநாட்டு மக்களின் உறவை மேலும் வலுப்படுத் தும் என்றார்.

பிரதமர் லீ, ஆஸ்திரேலியப் பிரதமர் மெல் கம் டர்ன்புல் இருவரும் நேற்று ஆசிய நாகரிக அரும் பொருளகத்தில் உள்ள ‘டைனி டர்டல்ஸ்’ கண் காட்சியைப் பார் வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon