சாலை நடுவே சிக்கிய டாக்சியை தூக்கி உதவிய 10 வழிப்போக்கர்கள்

சாலை நடுவே உள்ள தடுப்பில் சிக்கிக்கொண்ட டாக்சியைக் கிட்டத்தட்ட 10 வழிப்போக்கர்கள் ஒன்று சேர்ந்து அங்கிருந்து அகற்ற உதவினர். வெள்ளிக்கிழமை இரவு சுவா சூ காங் அவென்யூ 5ல் உள்ள சாலைத் தடுப்பு ஒன்றில் அந்த டாக்சி சிக்கிக்கொண்டது. நடந்த வற்றைக் கவனித்த பொதுமக்க ளில் ஒருவர், புகைப்படங்கள் எடுத்து ‘ஸ்டோம்ப்’ இணையத் தளத்திற்கு அனுப்பியிருந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த திரு வில்லம் ஜேக்கப், முதலில் அந்த இடத்தில் மூன்று பேர் கூடினர் என்றும் பிறகு மேலும் இருவர் உதவிக்கு வந்தனர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழிடம் கூறியிருந்தார். படிப்படியாக அங்கு மேலும் பலர் கூட, கிட்டத்தட்ட 10 பேர் அங்கு சேர்ந்துவிட்டனர். டாக்சி யின் சக்கரத்துக்குக் கீழ் ஒரு பலகையை வைத்து அனைவரும் ஒன்றாக டாக்சியைத் தூக்கி தடுப்பிலிருந்து அப்புறப்படுத்தி னர். 10 நிமிடங்களில் இச்சம்பவம் முழுதும் நடந்து முடிந்து விட்டது என்று திரு வில்லம் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்