கனடாவில் தமிழில் தேசிய கீதம்

கனடா: நாட்டின் 150 வது சுதந்திர தினம் வருகிற ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலான கனடா தேசிய கீதத்தை கவிஞர் கந்தவனம் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next