சுடச் சுடச் செய்திகள்

ரூ.2 லட்சம் ரொக்கமாகப் புழங்கினால் 100% அபராதம்

புதுடெல்லி: வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது போன்ற பணப்பரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்- காணித்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிக மான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடை நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் 269 எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்ப- தற்கோ தடைவிதித்துள்ளது.

எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon