சுடச் சுடச் செய்திகள்

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்பு

பாரிஸ்: அதிகாரபூர்வ பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இ மானு- வல் மேக்ரானை சந்தித்துப் பேச்சு- வார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜெர்- மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளுக்குப் பய- ணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா பயணத்தை முடித்தபின் நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்று சேர்ந்தார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் புறப்பட்ட மோடி, அவரது டுவிட்டர் பக்கத்- தில் ரஷ்யாவிற்கு நன்றி தெரி- வித்துள்ளார். அதில் பல திட்- டங்கள் மற்றும் பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இது இந்தியா = ரஷ்யா நட்புக்கு உறுதுணையாக இருக்கும். மேலும், பிரான்ஸ் பயணம் குறித்து, இந்தியாவுடனான முக்கிய நட்பு நாடான பிரான் சுடனான உறவை மேம்படுத்து வதற்காக வந்துள்- ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரோனை (நடுவில் வலது) சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். எலிசீ அரண்மனையில் நடந்த இந்தச் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் ஜீன்ஸ்-யுவ்ஸ் லி டிரியன் (வலமிருந்து நான்காவது) மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி