பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்- களை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்- தானில் இருந்து நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீர் போன்ற நகர்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடிச் சோதனை மேற்கொண்டது. காஷ்மீரில் 14 இடங்களிலும் டெல்லியில் 8 இடங்களிலும் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து பெறப்- பட்ட நிதியை வழக்கமான நிதி- யாக மாற்றியதற்காக முதற்கட்ட விசாரணயை நேற்று மாலை தேசிய புலனாய்வு அமைப்புத் துவங்கிய நிலையில் நேற்று அதிகாலை இரண்டாம் கட்ட பிரிவினைவாதத் தலைவர்களின் இல்லத் தில் சோதனை நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் எட்டு கறுப்புப்பண முகவர்கள் மற்றும் சில வர்த்தகர்களிடமும் இந்தச் சோதனை நடைபெற்றது. சோதனை நடவடிக்கைக்குள்ளா- ன வர்கள் அனைவரும் பிரிவினை- வாத தலைவர் சையது அலி ஷா கிலானி மற்றும் ஹூரியத் மாநாட்டு அமைப்பினருடன் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. அரியானாவில் உள்ள சோனா- பேட் பகுதியிலும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குழுக்களிடம் இருந்து நிதியைப் பெறுவதாக பிரிவினைவாதிகளில் ஒருவரான நயீம் கான் தொலைக்காட்சி ரகசிய புலனாய்வில் ஒப்புக்கொண்ட காணொளி வெளியானது.

இதையடுத்து நயீம் கான் உள்ளிட்ட மூன்று பிரி- வினைவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்திடம் இருந்து இந்தியாவில் பயங்கரவாதச் செயல் களை அரங்கேற்ற நிதி வழங்கப்படுகிறது.

Loading...
Load next