உலகின் வெப்ப நிலை 0.3 டிகிரி செல்சியஸ் உயரும்

பாரிஸ்: உலகின் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று ஐநா தெரிவித்துள்ளது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் உலக வெப்பநிலையில் மேலும் 0.3 டிகிரி செல்சியஸ் உயரும் என ஐநா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனிவாவில் அமைந்துள்ள உலக வானிலை மையத்தின் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர், டியோன் டெர்ப்லேன் செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார். பாரிஸ் உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அவரது அந்த செயலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித் துள்ளன. இந்த மோசமான சூழ்நிலையில் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் உயர்வு மிகவும் மோசமாகவே இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

தொழிற்புரட்சி காலத்திற்கு முந்தைய வெப்பநிலைகளை ஒப்பிடும்போது தற்போது உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டியுள்ளது. இது ஒரு மோசமான சூழ்நிலை. இதனால் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று டியோன் கூறினார். புவி வெப்பம் அடைவதைத் தடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு காணப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியசாகக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon