காயம் அடைந்த சிறுவர்களுக்கு பாடகி ஆறுதல்

மான்செஸ்டர் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அமெரிக்கப் பாடகி அரியானா கிராண்டே நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். ராயல் மான்செஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுடன் அவர் சில மணி நேரம் செலவிட்டார். மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கு வதற்காக அந்நகரில் இன்று இசை நிகழ்ச்சியை அவர் படைக்கவுள்ளார். அந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். அதற்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. படம்: டுவிட்டர்