‘உடல் வலி, வேதனைகளை வெளியில் சொல்வதில்லை’

எனக்கும் உடல் வலி, மன வேதனை எல்லாம் ஏராளம் உள்ளது. அதை எல்லாம் வெளியில் நான் சொல்வதே இல்லை என்று கூறியுள்ளார் அனுஷ்கா. “ஒரு நடிகை என்றால் எல்லோருக்கும் ரொம்ப இளக்காரமாகி விடுகிறது. ‘அவளுக்கென்ன நிறைய பணம் பெட்டி பெட்டியாய் வருகிறது. சொகுசான வாழ்க்கை வாழ்கிறாள்’ எனச் சாதாரணமாக நினைக்கிறார்கள். அவர்கள் படும் வலியும் வேதனை யும் அவரவர்களுக்குத்தானே தெரியும்,” என்கிறார் பாகுபலி நாயகி அனுஷ்கா. “சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை. ‘அருந்ததி’ படத்துக்குப் பிறகு அதுமாதிரி கதைகளில் என்னால் நடிக்கமுடியும் என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நம்பினார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டேன்.

சினிமா ஒரு கனவு உலகம். இயக்குநர் இந்தக் கனவு உலகத்தில் அழகான வான வில்லை உருவாக்குகிறார். அதில் நான் ஒரு வண்ணமாக இருக்கிறேன். “நிறைய பேர் சினிமாவில் நடிப்பதற்கு கவர்ச்சியும் அழகும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். சொந்த வாழ்க் கையில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் அழகு வந்துவிடும். அழகு மனது சம்பந்தப்பட்டது. மகிழ்ச்சியாக இருந்தால் அழகு இல்லாதவர்கள் கூட அழகாகத் தெரிவார்கள். “இந்தத் திரைத்துறையில் நடிகைகளுக்கு கண்ணீர், கஷ்டம் எதுவும் இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள்.

அது தவறு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பாக நடித்து இருப்பதாக நடிகைகளைப் பலரும் பாராட்டலாம். அதற்கு பின்னால் இருக்கும் வலியும் வேதனையும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ‘மேக்கப்’ போடுவதற் காக மணிக்கணக்கில் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். “படப்பிடிப்பு முடிந்து இரவு வீட்டுக்குப் போனால் உடம்பு கடுமை யாக வலிக்கும். அதைக் குடும்பத்தினரிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்று தனி அறைக்குள் இருந்து வேதனையால் அழுது இருக்கிறேன்,” என் கிறார் அனுஷ்கா வெளிப்படையாக.

இப்பகுதியில் மேலும் செய்திகள்