60 வயது இயக்குநர் 30 வயது நாயகியை மணந்தார்

இயக்குநர் வேலு பிரபாகரன் தன்னை விட 30 வயது குறைவான நடிகை ஷெர்லி தாஸை திடீர் திருமணம் செய்துகொண்டார். ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘அதிசய மனி தன்’, ‘காதல் அரங்கம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளருமான இவர் இயக்கிய ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியீடு கண்டது. இந்நிலையில் இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் நேற்று ஜூன் 3ஆம் தேதி காலை 10.25 மணியளவில் நடைபெற்றது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்ட வேலு பிரபாகரனுக்கு 60 வயது, ஷெர்லிக்கு 30 வயது. மணமகளும் நடிகையுமான ஷெர்லி தாஸ், வேலு பிரபாகரன் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற படத்தில் கதாநாயகி யாக நடித்தவர். வேலு பிரபாகரனின் இயக்கத் தில் வெளியாகியுள்ள ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ சிறப்பு வெளியீட்டு காட்சியைக் காண வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் தம்பதிகள் பேசினர்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடிகை ஷெர்லி தாஸை மோதிரம் மாற்றி திடீர் திருமணம் செய்துகொண்ட இயக்குநர் வேலு பிரபாகரன். படம்: தமிழகத் தகவல் சாதனம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon