சுடச் சுடச் செய்திகள்

இதுவரை இல்லா அளவுக்கு பயங்கரவாத மிரட்டல் சூழல்

உலகில் எத்தனையோ பொருளியல் மிரட்டல்களை எல்லாம் சமாளித்துவிட்ட சிங்கப்பூரை, இதுநாள்வரை இல்லாத அளவுக்கு பயங்கரவாத மிரட்டல்கள் அண்மைய ஆண்டு களில் ஆகஅதிகமாகச் சூழ்ந்துவிட்டன.

மத்திய கிழக்கில் ஆட்டம்போடும் ஐஎஸ் அமைப்புதான் சிங்கப்பூருக்கு அதிபயங்கரவாத மிரட்டலாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளின் முக்கிய குறியாக சிங்கப்பூர் இருக்கிறது. தீவிரவாத மனப்போக்குடன், தனி ஆட் களாகச் செயல்படும் உள்ளூர் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமையும் உள்ளது. தீவிரவாத மனப்போக்குடன் இங்கு வாழ்ந்துவரும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள்.

சிங்கப்பூரைத் தாக்க பயங்கரவாதிகள் சென்ற ஆண்டில் திட்டவட்டமாகக் குறிவைத்ததை மறப்பதற்கில்லை என் றெல்லாம் சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக்கை 2017ல் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியா பகுதியின் மையத்தில், கேந்திர முக்கியத்துவமிக்க அமைவிடத்தில் உள்ளது. உலகில் யாரையும் எந்த நாட்டையும் எப்போதும் எந்த நிலையிலும் பகைத்துக்கொள்வதில்லை; அனைத்துலக அளவில், வட்டார நிலையில் ஏதாவது பிரச்சினை என்று வரும்போது யார் பக்கமும் சாய்வதில்லை; நடுநிலையான உலக அமைப்புகளை ஆதரித்து, அனைத்துலக நீதி நியாயம், சட்டத்தின் பக்கம் வலுவாக இருந்து, உலக ஒழுங்கைக் கட்டிக்காக்க ஆதரவளித்து வரும் வகையில் தன் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ள நாடு சிங்கப்பூர். உலகைவிட்டு பயங்கரவாதம் அகல வேண்டும் என்பதால் பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்துலக கூட்டணியில் சிங்கப்பூர் இடம்பெற்று இருக்கிறது. சமயச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கும் சிங்கப்பூருக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரிக்கும் பல அம்சங்களும் இணக்கமானதாக இல்லை. ஐஎஸ் இயக்கத்தை எதிர்த்து வரும் மேற்கத்திய நாடுகளின் பொருளியல், வர்த்தக நலன்களுக்கு சிங்கப்பூர் ஆதரவு அளிக்கிறது. ஆகையால் தான் ஐஎஸ் அமைப்பும் இதர பயங்கரவாத அமைப்புகளும் சிங்கப்பூரைக் குறி வைக்கின்றன.

சிங்கப்பூர் இதர பல நாடுகளைப் போன்றது அல்ல. ஒற்றுமையாக, நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற பல இன, பல சமய சிங்கப்பூர் மக்களிடையே எளிதில் பிளவை ஏற்படுத்திவிடலாம். நிலவளம் இல்லாத சிங்கப்பூரை எளிதில் தாக்கி சீரழித்துவிடலாம் என்பது பயங்கரவாதி களின் கணக்காக இருக்கக்கூடும்.

உலகில் அல் காய்தா, உள்ளிட்ட எத்தனையோ பயங்கர வாத அமைப்புகள் இருந்தாலும் ஐஎஸ் அமைப்பைப் போல் கட்டுக்கோப்பான, இமாலய கணினி இணைய பலத்தைக் கொண்ட ஓர் அமைப்பை இதுநாள் வரை உலகம் பார்த்த தில்லை. உலகம் முழுவதையும் சேர்ந்த இளையர்களை அந்த அமைப்பு இணையம் மூலம் வசியப்படுத்தி தன் வலையில் விழச்செய்து அவர்களை வைத்து பயங்கர வாதத்தை அரங்கேற்றுகிறது. சிங்கப்பூரில் இருந்துகூட இரண்டு பேர் சிரியா சென்றுள்ளனர்.

மேற்கத்திய நாடுகள் மத்திய கிழக்கில் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக ஐஎஸ் அமைப்பு பலவீன மடைந்து வரும் நிலையில், அந்த அமைப்பில் இருந்தவர்கள் தங்கள் நாடுகளுக்குப் பயங்கரவாத எண்ணத்துடன் திரும்பும் வாய்ப்பும் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. சிங்கப்பூருக்கு மட்டுமின்றி இந்த வட்டாரத்தையே குறி வைக்கும் ஐஎஸ் அமைப்பை ஒழிக்க வட்டார நாடுகள் பலவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

திட்டவட்டமான தாக்குதல் பற்றிய அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் சிங்கப்பூர் அரசாங்கம் எப்போதும் விழிப்புடன் இருந்து வருகிறது. அதே வேளையில் மக்களின் பொறுப்புகளையும் அமைச்சு தன் அறிக்கையில் எடுத்துக்கூறி உள்ளது.

ஏதேனும் சந்தேகம் என்றால், யாரேனும் தீவிரவாத மன நிலையுடன் இருப்பது தெரியவந்தால் உடனே அதிகாரிகளு டன் தொடர்புகொள்ளுங்கள். பயங்கரவாதம் நிகழ்ந்தால் ஒற்றுமை குலையாமல், நல்லிணக்கம் கெடாமல், பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவரும் ஆற்றலுடன் மக்கள் திகழவேண்டும். எஸ்ஜிசெக்யூர் இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொள்வ தன் மூலம் சிங்கப்பூரர்கள் பயங்கரவாதத்தைத் துடைத்து ஒழிப்பதில் தங்கள் கடமையைச் செவ்வனே செய்யமுடியும். பயங்கரவாதத்தைத் தவிர்ப்பதில் அரசாங் கத்தைவிட அதிக விழிப்புடன் மக்கள் இருந்துவர வேண்டும் என்பதால் அவர்களுக்கு இது அவசியமாகிறது.2017-06-04 06:00:00 +0800

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon