ஒரு படம், நாலு நாயகிகள்

இப்போதெல்லாம் தமிழில் அத்திப் பூத்தாற் போல் எப்போதாவது ஒரு படத்தில் மட்டுமே தலைகாட்டுகிறார் பிரணிதா. அந்த வகையில் அவர் தற்போது நடிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இந்தப் படத்தில் இவர் மட்டுமே நாயகி அல்ல. மொத்தம் நான்கு பேராம். ரெஜினா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என மேலும் மூன்று பேர் இருந்தபோதிலும், எந்தவிதமான தயக் கமும் இன்றி நடிக்க ஒப்புக்கொண்டி ருக்கிறார். பொதுவாக இரண்டு நாயகிகள் நடித்தாலே பிரச்சினை வரும். நான்கு நாயகிகள் நடித்தால் பிரச்சினை என்று கேட்டால், கலகல வெனச் சிரிக்கிறார் பிரணிதா.

“எதற்காக சண்டை போட வேண்டும். சில சமயங்களில் அப்படிப் பட்ட மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம். மற்றபடி நடிகைகளுக்கு ஊடகங்கள் சித்திரிப்பது போல் போட்டி பொறாமை எல்லாம் இல்லை. “இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் எனும் அன்பான தோழி கிடைத்துள்ளார். “நானும் அவரும் பங்கேற்ற படப் பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இருவரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு, சிரித்துப் பேசிப் பழகி ஜாலி யாக நடித்தோம். தினந்தோறும் இரு வரும் செல்ஃபி எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டோம். அதை யெல்லாம் நீங்கள் கவனிக்க வில்லையா?

“அதிதியும் ரெஜினாவும் சம்பந்தப் பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதனால் அவர்களு டன் அதிகம் தொடர்பில் இருக்க முடியவில்லை. எங்களைப் போலவே அவர்கள் இருவரும் கூட்டாளிகள் ஆகிவிட்டனர்.

“அது மட்டுமல்ல, கேரளா வரை ஜாலியாக ஒரு பயணம் போய் வந்தி ருக்கிறார்கள். இன்றைய கதாநாயகி களுக்குள் சண்டை வரும் என்ப தெல்லாம் ரசிகர்களிடம் எடுபடாது,” என்கிறார் பிரணிதா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon