ஜெய் ஆனந்த்தின் திறப்பு விழா

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக திரையில் நல்ல நோக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்ட படம் ‘திறப்பு விழா’. இப்படம் வசூல் ரீதியில் சாதிக்கவில்லை என்றாலும், விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளது. இதில் நாயகனாக நடித்த ஜெய் ஆனந்த், தனது இயல்பான நடிப்பால் அனைத்துத் தரப்பின ரையும் கவர்ந்துள்ளார். சிறு வயது முதலே சினிமா மீதும் நடிப்பின் மீதும் வெகுவாக ஈர்ப்பு இருந்ததாம். பள்ளியில் படித்தபோது சினிமா நினைப்பால் நல்ல மதிப்பெண்களையும் பெற வில்லையாம். எனினும் கலைத் துறை மீதான இவரது ஆர் வத்தைக் கண்ட ஆசிரியர்கள், சிறப்பு மதிப்பெண்கள் அளித்து ஒவ்வொரு வகுப்பாக கடத்தி இருக்கிறார்கள். “ஒரு கட்டத்தில் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமா வாய்ப்புகளைத் தேடினேன். கோடம்பாக்கத்தில் எதுவும் சுலபத்தில் அமையாது என்பது போகப் போகப் புரிந்தது. நீண்ட நெடிய முயற்சிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

“ஆகா, ஓகோன்னு சொல்கிற மாதிரி இல்லை என்றாலும், அந்தப் படத்தில் நடித்த பிறகு என்னாலும் சினிமாவில் மிளிர  முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஒரு பக்கம் வாய்ப்பு தேடும் படலம் நடந்தாலும், அதே காலகட்டத்தில் என்னை சினிமாவுக்காக முழுமையாகப் பட்டை தீட்டிக்கொண்டேன். “நாடகக் குழுக்களில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அங்கு அறிமுகமானவர்தான் ‘திறப்பு விழா’ படத்தின் இயக்கு நர் வீரமணி. முதல் படத்திலேயே மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வேடத்தில் நடித் ததைப் பெருமையாகக் கருதுகி றேன்,” என்கிறார் ஜெய் ஆனந்த்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘துணிந்து செய்’ படத்தில் ரத்தன் மவுலி, நயனா. படம்: ஊடகம்

09 Dec 2019

துணிந்து செய்

அப்பா செல்லமான காஜல் விதவிதமாக கேக் செய்து அப்பாவை சாப்பிடச்சொல்லி ரசிப்பாராம். படம: ஊடகம்

08 Dec 2019

இட்லி, சாம்பாரில் மயங்கிய காஜல்