டாக்டர் இங்: வட்டார வர்த்தகம் செழிக்க நிலைப்பாடு அவசியம்

வட்டார வர்த்தகம் செழித்தோங்க வேண்டுமானால் அதற்கு பாது காப்பும் நிலைப்பாடும் இன்றியமை யாதவை என்று தற்காப்பு அமைச் சர் இங் எங் ஹென் தெரிவித்தார். அதிக செழிப்பும் முன்னேற்ற மும் இடம்பெறவேண்டுமானால் பாதுகாப்பும் நிலைப்பாடும் அவசிய மானவை என்பதை எப்போதுமே நாம் மனதில்கொள்ளவேண்டும் என்று ஷங்கிரிலா கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் பிரத்தியேகக் கூட்டத்தில் பேசியபோது அமைச் சர் குறிப்பிட்டார். ஆசியானின் தலைமைப் பொறுப்பை அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஏற்கிறது.

பாதுகாப்பு, வர்த்தக நலன் களைச் சமநிலைப் படுத்துவதற் குத் தன்னாலான அனைத்தையும் அப்போது அது செய்யும் என்று அமைச்சர் உறுதி கூறினார். உலகப் பொருளியலில் ஆசி யான் ஒளிமயமான ஒரு வட்டார மாகத் திகழ்கிறது என்றாரவர். அனைத்து பசிபிக் பங்காளித் துவ தாராள வர்த்தக உடன்பாடு, வட்டார பரந்த பொருளியல் பங் காளித்துவ உடன்பாடு முதலான வர்த்தக உடன்பாடுகள் ஆசியா னைச் சரியான திசையில் வழி நடத்துவதாக அவர் குறிப்பிட்டார். இவற்றை சிங்கப்பூர் முற்றிலும் ஆதரிப்பதாகக் கூறிய டாக்டர் இங், இவை அனைத்துக்கும் சிங் கப்பூர் வசதிகளை ஏற்படுத்தித் தரும் என்றார். வர்த்தகம் செழிக்க வேண் டும் என்றால் அதற்கு நிலைத் தன்மை முக்கியம் என்று டாக்டர் இங் வலியுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon