சாலை விபத்தில் 7 பேர் காயம்

உட்லண்ட்சில் நேற்றுக் காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறார் உட்பட ஏழு பேர் காயம் அடைந் தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 5ல் இரண்டு கார்களும் இரண்டு லாரிகளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாயின. காயம் அடைந்தவர்களில் ஐவ ருக்கு வயது 16 முதல் 35 வரை. இரண்டு பேர் சிறார்கள் என்றும் அவர்களுக்கு வயது 10 மற்றும் 11 என்றும் தெரிவிக்கப்பட்டது. போலிஸ் விசாரணை தொடர் கிறது.

விபத்தில் சிக்கிக் கொண்ட இரு லாரி களுள் ஒன்றின் பின்பகுதி சரிந்து கிடக்கிறது. படம்: ஃபேஸ்புக்