சுடச் சுடச் செய்திகள்

‘சமய நல்லிணக்கமும் இன சகிப்புத்தன்மையும் மிக முக்கியம்’

சமய நல்லிணக்கமும் இன சகிப் புத்தன்மையும் முக்கியம் என்றும் அவை வழக்கமான ஒன்று எனக் கருதக்கூடாது என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் டெஸ்மண்ட் லீ வலியுறுத்தினார். புளு ஸ்டார் வெளிநாட்டு ஊழி யர் தங்கும் விடுதியில் உள்ள சுமார் 700 வெளிநாட்டு ஊழியர் களுடன் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். சிங்கப்பூருக்கு பயங்கரவாத மிரட்டல் இதுவரை இல்லாத அள வுக்கு அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதைப் பற்றி குறிப்பிட்ட திரு லீ, எஸ்ஜிசெக்யூர் இயக்கம் முக்கியமான ஒன்று என்றும் அதில் ஈடுபாடுகொள்ள வேண்டியது வெளிநாட்டு ஊழியர் கள் உட்பட எல்லா மக்களுக்கும் முக்கியமான ஒன்று என்றும் வலி யுறுத்தினார். இதனிடையே, ரமலான் மாதத் தையொட்டி 575 ஏழைக் குடும்பங்களுக்கு நேற்று $209,000க்கு மேற்பட்ட தொகையும் பற்றுச்சீட்டு களும் வழங்கப்பட்டன.

புளு ஸ்டார் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்) பங்ளாதேஷ் ஊழியர்களுடன் உணவருந்தினார். மினி என்வைரன் மெண்ட் சர்வீஸ் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகம்மது அப்துல் ஜலீல் உடன் இருக்கிறார். படம்: எம்இஎஸ் குழுமம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon