அதிகமான வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு கோரிக்கை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மிரட்டல்கள் அதிகரித்து வருகி றது என்றும் அவற்றை ஒடுக்க அதிக அளவில் வட்டார பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவை என்றும் தென்கிழக்கு ஆசிய தற்காப்பு துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் மூன்று நாள் நடந்த ஷங்கிரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த வட்டார தற்காப்பு அமைச்சர் களும் உயர் அதிகாரிகளும் தென்கிழக்கு ஆசியாவில் பயங்கர வாத நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்த வேண்டிய தேவை, தங்களு டைய பொதுவான அக்கறைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று தெரி வித்தனர். பயங்கரவாதமே இந்த வட்டாரத் தின் மிகப் பெரிய பாதுகாப்புக் கவலையாக இருக்கிறது என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஒடுக்கப்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பு போராளிகள் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவரும் ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்தார். லண்டனில் ஆகப் புதிய பயங் கரவாதத் தாக்குதல் அரங்கேற்றப் பட்ட வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் கூட் டம் நடக்கும்போதுகூட லண்டனி லும் பிலிப்பீன்சின் மராவி நகரி லும் பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றப்பட்டதை டாக்டர் இங் தன் உரையில் குறிப்பிட்டார். இவ் வட்டாரத்தில் செயல்படும் குறைந் தது 31 குழுக்கள் ஐஎஸ் அமைப் பிற்கு விசுவாசம் தெரிவித்திருப் பதை டாக்டர் இங் சுட்டிக்காட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon