அரிதான அனுபவங்களை நல்கிய விமானப் பயிற்சி

ரவீணா சிவகுருநாதன்

சிறு வயதிலிருந்தே விமானங்கள் ஓட்டுவதைக் கனவாகக் கொண் டிருந்த ஆங்கிலோ சீன தன் னாட்சிப்பள்ளியைச் சேர்ந்த கௌதமன் அரவிந்தன், 18 வயதிலேயே விமானம் ஓட்டு வதற்கு உரிமம் பெற்றுள்ளார். உயர்நிலை நான்கில் பயின்ற போது இவரது பள்ளிக்குச் சென்ற சிங்கப்பூர் இளையர் விமானப் பயிற்சிப் பள்ளியின் தூதர்கள் தங் களது அனுபவங்களை மாணவர் களிடையே பகிர்ந்துகொண்டனர். அது இவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர முடிவு எடுத்தார். ஈராண்டு பயிற்சிக்குப் பிறகு இம்மாதம் தனது தனியார் விமான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றார் கௌதமன் அரவிந்தன். எழுத்து, செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விமான உரிமம் பெறுவது எளிதல்ல என்ற கௌதமன், விமானம் ஓட்டுவதற்கு ஆர்வத் துடன் தைரியமும் அதிகமாகத் தேவை என்றார்.

கௌதமன். படம்: கௌதமன் அரவிந்தன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon