அடையாளம் தந்த தேசிய சேவை

சுதாஸகி ராமன்

சென்னையில் பிறந்து ரஷ்யா, போலந்து, பிரட்டன் என்று வெளிநாடுகளில் வளர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார் 19 வயது பிரித்திவி வெங்கடேஷ். அனைத்துலகப் பள்ளிகளில் பயின்று வந்ததால் சிங்கப்பூர் கலாசாரத்தைப் பற்றி முழுதாகக் கற்றுக்கொண்டு மற்ற சிங்கப்பூரர் களுடன் ஒருங்கிணைந்து வாழும் வாய்ப்பு அவருக்கு சரிவரக் கிடைக்கவில்லை. சக சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து நாட்டுக்குச் சேவையாற்ற எண்ணி ஐந்தாண்டுகளுக்கு முன் தேசிய சேவையை மேற்கொள்ள முடிவு செய்தார் அப்போது நிரந்தரவாசியாக இருந்த அவர். இப்போது சிங்கப்பூர் போலிஸ் படையில் சேர்ந்து சேவையாற்று கிறார் பிரித்திவி. “தேசிய சேவையின்போது சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும் பினேன். புதியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப் பான்மையுடன் என் தேசிய சேவைப் பயணத்தைத் தொடங்கினேன்,” என்று கூறினார் பிரித்திவி.

குழுவின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட பிரித்திவி, சக குழுவினரின் நலம், கட்டுப்பாடு ஆகியவற்றை கவனித்துக்கொண் டார். மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று குழு வினரிடம் சேர்ப்பிப்பதும் பிரித்திவி யின் பொறுப்பு.

தலைமைத்துவப் பண்பு, போலிஸ் படைப் பயிற்சியில் சிறந்து விளங்கியது ஆகியவற்றுக்காக ‘சோர்ட் ஆஃப் மெரிட்’ எனப்படும் ‘தகுதி வாள்’ விருது பெற்ற பிரித்திவி வெங்கடேஷ் தம் பெற்றோருடன். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

16 Sep 2019

நாடாளுமன்றத்தில் ஒருநாள்

அனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.

16 Sep 2019

உடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை