சுடச் சுடச் செய்திகள்

ஹாங்காங்கில் போலிசை அடித்ததாக சிங்கப்பூரர் கைது

ஹாங்காங்: போலிசாரை தாக்கியதற்காக ஹாங்காங் கில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஜேசன் என்று உள்ளூர் ஊடகத்தினரால் அடையாளம் காணப்பட்ட அந்த 47 வயது ஆடவர் லான் குவாய் ஃபோங் சுற்றுலாத் தலம் அருகே டாக்சிக்காக காத்திருந்தோரின் வரிசையின் குறுக்கே நுழைந்ததைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது அந்த ஆடவர் குடிபோதை யில் இருந்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன. வரிசையில் நின்றிருந்தவர்களுக்கும் ஜேசனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலிசார் தலையிட்டனர்.

அப்போது போலிஸ் அதிகாரிகளில் ஒருவரை ஜேசன் தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து அவரது கைகளில் விலங்கிட்டு போலிசார் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. போலிஸ் தாக்கப்பட்டதை அறிந்ததும் ஏராளமான போலிசார் விரைந்து வந்து ஜேசனை வேனில் ஏற்றிச் சென்றதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. கையில் காயமடைந்த அதிகாரி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். போலிசைத் தாக்கியது தொடர்பில் ஜேசனிடம் விசாரணை தொடர்கிறது.