மராவியில் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை

மராவி: தென்பிலிப்பீன்சின் மராவி நகரில் பாதுகாப்புப் படையினருக்கும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுப் போராளிகளுக் கும் இடையில் சண்டை நீடித்து வரு வதால் அந்நகரில் சிக்கிக்கொண்ட 2,000 பேர் தவித்து வருகின்றனர். 13 நாட்களாக உணவின்றி வாடுவதால் அவர்களை மீட்க சண்டை நிறுத்தத் திற்குப் போராளிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் நேற்றுக் காலை சண்டை தொடர்ந்தது. அதனால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சண்டை நிறுத்தம் அம லுக்கு வந்துவிட்டதா அல்லது அது மீறப்பட்டதா என்று தெரியவில்லை என மீட்பு நிர்வாகக் குழுவின் பேச் சாளர் தெரிவித்தார்.

Loading...
Load next