எல்லைகளை மூடும் இந்தோனீசியா

சிங்கப்பூர்: பிலிப்பீன்ஸின் தென் பகுதியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் ஆத ரவு போராளிகள் எல்லை வழியாக நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க இந்தோனீசியா தனது எல்லைகளை மூடக்கூடும் என இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் ரியாமிஸார்ட் ரியாகுடு (படம்) தெரி வித்துள்ளார். பிலிப்பீன்ஸின் மராவி நகரில் பாதுகாப்புப் படை களுடன் கிட்டத்தட்ட 400 போரா ளிகள் மே 23 முதல் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரின் ஷங்ரிலா கலந்துரையாடலின் ஓர் அம்சமாக நேற்று நடந்த வட்டார பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்ற திரு ரியா மிஸார்ட், “எங்களது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

போராளிகள் இதர பகுதிகளுக் கும் சென்றுவிடாமல் தடுக்கும் நோக்கில் எங்கள் நாட்டின் எல்லை களை நாங்கள் மூடக்கூடும்,” என்று தெரிவித்தார். புலனாய்வுத் துறை தகவல் களின் அடிப்படையில் தென்கிழக் காசியாவில் கிட்டத்தட்ட இரு நூறாயிரம் ஐஎஸ்ஐஎஸ் அனு தாபிகள் இருப்பதாக அவர் மதிப் பிட்டார். 96 விழுக்காட்டு இந்தோனீசி யர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைப் புறக்கணிப்பதாக ஈராண்டு களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக்காட்டிய திரு ரியாமிஸார்ட், எஞ்சிய 4 விழுக்காட்டினர் இன்னும் முடிவு செய்யாமல் இருப்பது கவனத்துக் குரியது என்றார். காரணம் இந்தோனீசிய மக்கள்தொகையில் 4 விழுக்காட் டினர் என்பது கிட்டத்தட்ட எட்டு மில்லியன் பேர் என்றார் அவர்.

பிலிப்பீன்சில் 1,200 ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் முன்னதாக, அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்கில் பங் கேற்றுப் பேசிய இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர், பிலிப்பீன் சில் கிட்டத்தட்ட 1,200 ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தினர் இருப்பதாக வும் அவர்களில் 40 பேர் இந் தோனீசியாவில் இருந்து சென்ற வர்கள் என்றும் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon