சுடச் சுடச் செய்திகள்

மணிலாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பெரும் கடனாளி

மணிலா: மணிலா சூதாட்டக் கூடத்தில் கடந்த வெள்ளிக்கி ழமை துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவர் அடையாளம் காணப் பட்டுள்ளார். பிலிப்பீன்ஸ் நிதித் துறையின் முன்னாள் ஊழியரான அந்த 43 வயது ஆடவரின் பெயர் ஜெஸ்ஸி கார்லோஸ் என் றும் அளவுக்கதிகமாகச் சூதாடிய தன் காரணமாகப் பெரும் கடன் சுமைக்கு ஆளானவர் என்றும் தலைமை போலிஸ் கண்காணிப் பாளர் ஆஸ்கர் அல்பாயால்ட் தெரிவித்துள்ளார்.

ஒரு மகன் இரு மகள்க ளுக்குத் தந்தையான கார்லோஸ் கிட்டத்தட்ட 4 மில்லியன் பீஸே„ (111,897 சிங்கப்பூர் வெள்ளி) வைத்திருந்தாராம். சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்ததோடு கடைசியாக தமது ஃபோர்ட் ரேஞ்சர் லாரியையும் விற்க நேர்ந் ததாக போலிஸ் அதிகாரி கூறி னார். சூதாட்டப் பிரச்சினை மனைவியிடமும் பெற்றோரிடமும் கார்லோஸுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப் பிட்டார். கொள்ளையடிப்பதற்காக சூதாட்டக் கூடத்தில் நுழைந்த அவர், வானத்தை நோக்கி துப் பாக்கியால் சுட்டு ஓர் அறைக்குள் நுழைந்தார். பணம் எதுவும் அங்கு இல்லாததால் 113 மில்லியன் பீஸே„ மதிப்புள்ள சூதாட்டக்காய் களை தமது கைப்பையில் நிரப்பி யதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon