வெடிகுண்டு புரளி: நெரிசலில் சிக்கி 1,000 பேர் காயம்

டுரின்: இத்தாலிய நகரான டுரினில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நெரிசலில் ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண் டிருந்த வேளையில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. அது குண்டு வெடிக்கும் சத்தம் என புரளி கிளப்பிவிடப்பட்டதால் அத்தனை பேரும் அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்கினர். அவர்களில் பலர் தடுமாறி கீழே விழுந்து மிதிபட்டனர். ஏழு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் கடுமையாகக் காயமடைந்ததாகவும் போலிஸ் தெரிவித்தது. சம்பவம் நிகழ்ந்த பியாஸா சான் கேர்லோ சதுக்கத்தில் ஏராளமான கைப்பைகளும் காலணிகளும் சிதறிக் கிடந்தன.

நெரிசலில் சிக்கி மிதிபட்ட சிலரை காற்பந்து ரசிகர்கள் மீட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்