விதிமீறல் கட்டடங்களை இடிக்க ராமதாஸ் வலியுறுத்து

சென்னை: விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களின் எண் ணிக்கை சென்னையில் மட்டும் 50 ஆயிரத்தைக் கடந்துவிடும் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்படாது என்று வீட்டு வசதித்துறை அமைச்சரும், செயலாளரும் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். கட்டடங்களை சீரமைப்பதன் மூலம்தான் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்றும் சென்னை தியாக ராயநகரில் செய்யப்பட்டுள்ள விதி மீறல்கள் கற்பனைக்கும் எட்டா தவை என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

“இவற்றை எந்த வழிகளிலும் வரன்முறைப்படுத்த முடியாது. இக்கட்டடங்களை இடித்துவிட்டு விதிகளின்படி புதிதாகக் கட்டுவதுதான் யாருக்கும் பாதிப்பில்லாத தீர்வாக அமையும். “விதிமீறல் கட்டடங்கள் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காது இருந்துவிட்டு, நீதி மன்றங்கள் தடை விதித்தது தான் அனைத்துக்கும் காரணம் என்று பழிபோட்டுத் தப்பிக்க முயல்கிறது தமிழக அரசு,” என் றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next