தினகரனுக்குப் பிணை; அதிமுகவில் புதுக் குழப்பம்

சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய டிடிவி தினகரன் பிணை யில் வெளிவந்திருப்பதை அடுத்து அதிமுகவில் புதிய குழப்பங்கள் தலைதூக்கியுள்ளன. தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் சிலரது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளி வந்ததும் கட்சி நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடப்போவதாகத் திட்டவட்டமாக அறிவித்தார் தினகரன். இதற்கு செங்கோட்டை யன், ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் சில எம்எல்ஏக்களும் தினகரன் வசம் நிற்கின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் புதிய நெருக்கடியும் தர்ம சங்கடமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்றும், அப்போது அமைச்சர் ஜெயகுமார் பதவிக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வீண் நாடகங்கள் முடிவுக்கு வந்தால் மட்டுமே அதிமுகவின் இரு அணிகளும் இணைய முடியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon